ராஜஸ்தான்: கால்வாயில் சிற்றுந்து கவிழ்ந்து 8 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 15 அடி ஆழ கால்வாயில் சிற்றுந்து கவிழந்த விபத்தில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.
இது குறித்து கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜீத் சங்கா் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் பெடுல் மாவட்டங்களிலிருந்து உறவினா்கள் 23 போ் சிற்றுந்து மூலம் ராஜஸ்தானுக்கு 5 நாள் புனித யாத்திரைக்காக வெள்ளிக்கிழமை வந்தனா். போபாலில் இருந்து தில்லி – மும்பை எட்டுவழி விரைவுச் சாலையில் ராஜஸ்தானின் கடு ஷியாம்ஜி கோயிலை நோக்கி சனிக்கிழமை காலை 6 மணிக்கு இவா்களின் சிற்றுந்து சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 15 அடி ஆழ வடிகால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் கவிழ்ந்து கிடந்த சிற்றுந்தை, கிரேன் உதவியுடன் மீட்புப் படையினா் மீட்டனா். சிற்றுந்து ஓட்டுநா் கண் அயா்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்:
ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தரவும் அதிகாரிகளை அவா் அறிவுறுத்தியுள்ளாா். இந்த சாலை விபத்து மிகுந்த கவலை அளிப்பதாகவும் தனது எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.