;
Athirady Tamil News

18 தங்கச் சங்கிலிகள் கொள்ளை; சந்தேக நபர் கைது

0

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளை பறித்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த நபர் கடந்த மூன்று மாதங்களில் மஹரகம, ஹோமாகம, மாலபே உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலிகள் கொள்ளையிடப்படுள்ளது

கொள்ளைக்குப் பயன்படுத்திய இரண்டு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் 17 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொள்ளையிட்ட நகைகளை மஹரகமிலுள்ள அடகு நிலையமொன்றில் விற்பனை செய்துள்ளதாகவும், அவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.