;
Athirady Tamil News

கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி

0

கில்கில்,

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கி படித்து வருகிறன்றனர். இந்தநிலையில்,

பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிகொண்டிருக்கும் போது தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் 17 மாணவிகள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட மேல்நிலைப் பள்ளி கென்யா காவல் துறையால் நிர்வகிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பாளானோர் போலீஸ் அதிகாரிகளின் மகள்கள் ஆவர்.

கென்யாவில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தீ விபத்து
* 2001ம் ஆண்டில், மச்சாகோஸ் கவுண்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்தனர்.

* 2017ம் ஆண்டில், தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 மாணவர்கள் உயிரிழந்தனர்.

* 2018ம் ஆண்டில், அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ விபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

* 2024ம் ஆண்டில், மத்திய கென்யாவில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 மாணவர்கள் எரிந்து உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.