“சுற்றுச் சூழலை பாதுகாப்போம், இலத்திரனியல் கழிவுகளை மறுசுழற்சி செய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய, இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் உலக சுற்றாடல் தினமான இன்றைய தினம்(05.06.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கொமர்ஷியல் வங்கியின் யாழ்ப்பாண முகாமையாளர் T. யோகச்சந்திரா அவர்களால் கையளிக்கப்பட்டது.
இதன் போது உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் L. C. ஆனந்த், நிர்வாக உத்தியோகத்தர் கி.பொ. தனபால, கொமர்ஷியல் வங்கியின் உதவி முகாமையாளர் G.ரமணன் உள்ளிட்ட அலுவலகல்களும் கலந்து கொண்டனர்.