;
Athirady Tamil News

பாடகர் சங்கீதன் கைதை எதிர்த்து சிறிதரன் எம்பி கடும் சாடல்!

0

இலங்கைத் தீவில் என்னதான் ஆட்சியாளர்களும், அரசாங்கங்களும் மாறினாலும் தமிழ் மக்கள் மீதான பழைமைவாத இனவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியான கிளிநொச்சியில், தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து பாடியதற்காகப் பாடகர் சங்கீதன் என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு அவர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன
வெளியில் இனவாதம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் கூறினாலும், நடைமுறையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார வீழ்ச்சி காரணமாக, போதிய வாழ்வாதாரமின்றி தமிழ் இளைஞர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் அவல நிலை காணப்படுவதாகவும், இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

. எது எப்படி இருப்பினும், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படு*கொ**லைகளுக்கு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்குப் பதிலளிக்கும் வரை, தமிழ் மக்களின் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் தாங்கள் தொடர்ந்து ஓங்கி குரல் கொடுப்போம் என்றும் சிறிதரன் எம்பிஉறுதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.