FCIDலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (21) முற்பகல் அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.