;
Athirady Tamil News

சிறை செல்ல ஆயத்தமான மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏற்பட்டவருத்த நிலைமை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது.

 மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சிகிச்சை

தற்போது முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் பலரைக் கொண்ட குழுவினர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.