லொறி விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!
ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை வேறு இடத்திற்கு மாற்றி நிறுத்த முற்பட்டபோது, ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.
லொறியை இயக்கிய சாரதி, பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக எக்ஸிலரேட்டரை மிதித்ததால், லொறி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிச் சென்றுள்ளது.
இதன்போது, மின்கம்பத்துடன் மோதி லொறி நின்றுள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில், லொறிக்கு அருகாமையில் பெண் ஒருவர் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.
லொறி கவிழ்ந்திருந்தால் குறித்த பெண்ணும் விபத்தில் சிக்கியிருக்கக்கூடிய அபாயம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.