;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கான காலணி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா துறவற மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக காலணிகள் வழங்குவதற்கான விநியோகஸ்தர்களின் பதிவு 2026.11.03 முதல் 2026.12.20 வரை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறு வழங்கப்படும் வவுச்சர்கள் 2026.11.10 முதல் 2026.12.20 வரை எண்ணிம வடிவத்திற்கு(digital format) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காலணி விநியோகம்
இதற்கிடையில், இந்த காலணிகளைப் பெறுவதற்கான வவுச்சர் திட்டத்தின் கீழ், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய 04 மாகாணங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் திறந்த சந்தை மூலம் காலணிகளை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும், மேற்கு, தெற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய 05 மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் காலணி விநியோகஸ்தர்கள் நேரில் சென்று மாணவர்களுக்குக் காலணிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.