;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கு செயலமர்வு

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் வருமான மூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனின்  ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இச் செயலமர்வில், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு. ஜெலீபன், கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதன் மற்றும் காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் சுதர்சன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் அரச கட்டமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் அதன் நிர்வாகச் செயற்பாடுகள், உள்ளூராட்சி மன்றங்களின் வருமான மூலங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் டிஜிட்டல் திரைகளின் உதவியுடன் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறை ரீதியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இச் செயலமர்வில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரனும் கலந்து கொண்டார்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.