கனடா வாழ் “புங்குடுதீவு ஸ்ரீராஜா” நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)

கனடா வாழ் “புங்குடுதீவு ஸ்ரீராஜா” நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
#############################
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் வசிக்கும் தாயக உறவான குணராஜா ஸ்ரீராஜா அவர்களின் பிறந்த நாளில் தாயகத்தில் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.
நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாரத்திற்கு மூன்று தடவை இரத்த சுத்திகரிப்புக்காக வைத்தியசாலைக்கு சென்றுவரும் குடும்பத் தலைவரான திரு.நாராயணசாமி பவானந்தம் என்பவர் பாரதிபுரம் வவுனியா என்னும் முகவரியில் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வரும் சூழ்நிலையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” தங்களின் வறுமை நிலையினையும், கணவர் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையினையும் கூறி வாழ்வாதார உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த வேளையில்..
அவருக்கான உதவிகோரல் விண்ணப்பம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால்” தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வாழ்வாதார உதவி வழங்க சிபார்சு செய்யப்பட்டு கடந்த மாதம் பிறந்த நாளைக் கொண்டாடிய புங்குடுதீவைச் சேர்ந்தவரும், தற்போது கனடா நாட்டில் நிரந்தரமாக வசிப்பவருமான திரு.குணராஜா ஸ்ரீராஜா அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் .செட்டியார்குளம் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் முன்னிலையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால்” வழங்கி வைக்கப்பட்டது.
வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்படும் நிகழ்வில் பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு குமாரவேல் சுரேஸ்குமார், செட்டியார்கெளம் கமக்கார அமைப்பின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் மாலு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உபசெயலளார் திருமதி பெரியண்ணன் பரிமளம், மன்றத்தின் மாவட்ட இணைப்பாளரும் நிர்வாக சபை உறுப்பினருமான திருமதி நவரத்தினம் பவளராணி ஆகியோருடன் கிராமத்தில் வசிக்கும் சிலரும் கலந்து கொண்டனர்.
வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் உதவி வழங்குவோர் தொடர்பான பெயர்பலகையினை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரான திரு.குமாரவேல் சுரேஸ்குமார் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்து வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்க, செட்டியார்குளம் கமக்கார அமைப்பின் உறுப்பினர் பயனாளிக்கு கோழிகளை வழங்கி வைத்தார். தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் திருமதி நவரத்தினம் பவளராணி மற்றும் உபசெயலாளர் திருமதி பெரியண்ணன் பரிமளம் ஆகியோர் கோழிக்கூட்டினைத் திறந்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கோழிகளை கூட்டுக்குள் கோழிகளை விட்டனர்.
கனடாவாழ் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” இணைப்பாளர்களில் ஒருவரும், கனடா நம் தாயகம் குழுமத்தின் உரிமையாளர்களின் ஒருவருமான ராஜா என அழைக்கப்படும் திரு.குணராஜா உதயராஜா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பிரகாரம் இவ்வாழ்வாதார உதவி திரு நாரயணசாமி பாவானந்தம் அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கனடாவாழ் ஸ்ரீராஜா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வேளையில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எல்லோருக்குமான நன்றியினையும், கனடாவாழ் ஸ்ரீராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினையும் தெரிவித்தார்.
வாழ்வாதார உதவியினைப் பெற்றுக் கொண்ட குடும்பத் தம்பதிகள் இருவரும் “ஸ்ரீராஜா அவர்களுக்கு வாழ்த்து கூறியதோடு, குறித்த வாழ்வாதார உதவியானது தனது கணவரின் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதினில் சில நாட்கள் தள்ளிப் போனது இதற்காக பொறுமையாக இருந்து இன்றைய நாளில் உதவியை தந்துள்ளார்கள் எல்லோருக்கும் நன்றிகள்” என்றனர்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக உறவுகளோடு ஸ்ரீராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், வாழ்வாதார உதவி தொடர்பான அனைத்து நிதிப்பங்களிப்பு செய்தமைக்காக தாயக சொந்தங்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.12.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1