அமரர் மு.குணராசா அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
அமரர் முத்தையா குணராசா (குணம்) அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
##################################
புங்கையூரின் வழித்தோன்றலாகி இலங்கை தலைநகரில் புகழ்பூத்து வாழ்ந்த பிரபல வர்த்தகரும் பொதுவுடமைவாதியுமான அமரர் முத்தையா குணராசா அவர்களது இருபத்தைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவிகளின் தொடக்கமாக இன்றைய நாளில் வவுனியா இராசேந்திர குளம் கிராமத்தை அண்டிய விக்ஸ் காடு எனப்படுகின்ற மீள்குடியேறிய கிராமத்தில் வாழும் குடும்பங்களின் சிலரின் வாழ்வாதார நிலமைகள் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அவ்வாறான இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு அமரர் முத்தையா குணராசா அவர்களது அமரத்துவமடைந்த கால்லூற்றாண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்கு செய்வதறியாது திகைத்த வேளையில் அமரர் முத்தையா குணராசா அவர்களின் இருபத்தைந்தாமாண்டு நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அமரர் முத்தையா குணராசா அவர்கள் சாதி மத இன ரீதியான எவ்விதமான வேறுபாடுகளையும் பார்க்காது வாழ்ந்தவர், ஆகையால் தான் விக்காடு கிராமத்தில் வசிக்கும் கணவரை இழந்த இஸ்லாமிய குடும்பம் உட்பட சில குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
இதேவேளை மேலும் பல சமூகப் பங்களிப்பினை வழங்க அமரர் முத்தையா குணராசா குடும்பத்தினர் நிதிப் பங்களிப்பு செய்துள்ளனர். இனிவரும் தினங்களில் உதவி தேவைப்படும் உறவுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரியவகையில் உதவிகள் வழங்கப்படும். ஏற்கனவே பல்வேறுப்பட்ட உதவிகளை இக்குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வசிக்கும் இறுதி யுத்தத்தில் தந்தை காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கியுள்ள அதேநேரம், கொரோனா கொடுந்துயரில் வீடுகளில் முடக்கப்பட்ட நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு பெருந்தொகையான உலருணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்வரும் தினங்களில் கணவர் காலமாகிய நிலையில் மூன்று பிள்ளைகளுடன் கூலிவேலை செய்து வறிய நிலையில் சிதம்பரபுரம் கிராமத்தில் வாழும் குடும்பத் தலைவி ஒருவருக்கு கோழிக்கூட்டோடு கோழிகளும் வாழ்வாதார உதவியாக வழங்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை வாழ்வாதார உதவி வழங்கிய குணராசா குடும்பத்தினருக்கு தாயகமக்கள், மற்றும் பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரர் முத்தையா குணராசா அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
11.07.2021

















“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1