;
Athirady Tamil News

கிணற்றினுள் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள்..!!

மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (09) மாலை…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!!

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டினை…

நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது..!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருடிய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின்…

கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியதாக 14 வயது மாணவி உட்பட மூவர்…

வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற…

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க.வுக்கு அமித்ஷா பாராட்டு..!!

டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, கேரள வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்ததுடன் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிப்…

அமைதி பேச்சுவார்த்தை முறிவு – ஏமன் நாட்டில் இருதரப்பு மோதலில் ஒரே நாளில் 84 பேர்…

ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட…

டெல்லியில் போதை ஓட்டுனரால் நடந்த விபரீதம் – தறிகெட்டு ஓடிய கார் மோதி 2 பேர் பலி..!!

புதுடெல்லியில் ரஜோரி பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த 2 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து…

பாரிசில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் படுகாயம்..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ்…

காட்டுக்குள் இளைஞனை அழைத்து சென்று பெண் செய்த செயல்..!!

ஹுங்கம பகுதியில் பெண் உட்பட நான்கு பேர் இளைஞன் ஒருவரை ஏமாற்றி காட்டுக்குள் அழைத்துச் சென்றமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த குழுவினர் காட்டுக்குள் அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளார். இளைஞனின்…

இந்தோனேசிய கடற்படைக்கப்பல் இலங்கை விஜயம்..!!

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ´கிரி சுல்தான் ஹசனுடின்´ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இக்கப்பல்…

சிவனொளிபாதமலை யாருக்கும் சொந்தமானதல்ல..!!

மலையகத்தில் நேசிக்கின்ற பூஜிக்கின்ற புனித இடங்களில் சிவனொளிபாதமலை மிகவும் பிரசித்தி இடமாக இருந்துள்ளது. இது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இதனை இந்துக்கள் சிவனொளிமலையாகவும், பௌத்தர்கள் ஸ்ரீ பாதமாகவும்,…

இலவச பொருளால் நடுத்தெருவில் மயங்கி கிடந்த தாய்: கதறி அழுத பச்சிளங்குழந்தை..!!

அயர்லாந்தில் அறிமுகம் இல்லாத ஒரு நபர் கொடுத்த சிகரெட்டை பிடித்ததால் சம்பவ இடத்திலேயே தாய் மயங்கி கிடக்க அருகில் பச்சிளங்குழந்தை கதறி அழுதுகொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அயர்லாந்து நாட்டை சேர்ந்த Ciara Tynan என்ற 30 வயதான பெண்,…

90 ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம்??..!!

பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டதாகக் நம்பப்பட்ட மரக்கங்காரு, தற்போது இந்தோனேசியாவில் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த மைக்கேல் சுமித் என்ற புகைப்பட கலைஞர், இந்தோனேசியாவின் பப்புவா என்ற வனப்பகுதியில் புகைப்படம்…

தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்: அதிர்ச்சி காரணம்..!!

ரஷ்யாவில் கணினி விளையாட்டில் தோலிவியை சந்தித்த 15 வயது சிறுவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Mogochino கிராமத்தில் குடியிருக்கும் சிறுவன் பவெல் மாட்வேவ், சம்பவத்தன்று தங்களது…

லண்டன் நடுவே 100 அடி உயரத்தில் தொங்கிய நபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

லண்டன் Tube station பகுதியில் 100 அடி உயர கிரேனில், யாரோ ஒரு மர்ம நபர் அந்தரத்தில் தொங்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Tube station பகுதியில் உள்ள 100 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட கிரேன்…

மனைவியின் தோலை உரித்து உடலை துண்டுகளாக்கி கழிவறையில் போட்ட நபர்: சொன்ன காரணம்..!!

அமெரிக்காவின் Missouriயைச் சேர்ந்த ஒரு நபர் இறந்த தனது மனைவியின் தோலை உரித்து அவரது உடலை துண்டுகளாக்கி கழிவறைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார் அதற்கு அவர் கூறியுள்ள காரணம், தனது மனைவி இறந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தால் தனது பிள்ளைகளை…

வெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்கள்: ஒரு வித்தியாசமான ஆய்வு..!!

கடந்த இருபது ஆண்டுகளில் வெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டு ஜேர்மானியரல்லாதவரோடு சேர்ந்து வாழும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக இருந்தது,…

பாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்: என்ன காரணம் தெரியுமா?..!!

பாம்பு குறித்த அச்சத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில் பங்கேற்க ஆட்களைப் பிடிப்பதற்கு பேஸல் பல்கலைக்கழகம் போராடி வருகிறது, எதனால் என்று தெரிந்தால் ஒரு வேளை நீங்கள் ஆச்சரியப்படலாம். பேஸல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை…

மகளிருக்கு உள்ளதைப்போல் ஆண்களுக்கும் தனி ஆணையம் – தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்..!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் நடைபெற்ற தற்கொலைகள் தொடர்பாக ஆய்வு செய்த ஒரு அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ‘நாட்டில் தேசிய மகளிர் ஆணையம்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சீனா, சவுதி மந்திரிகள் சந்திப்பு..!!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி அரேபியா நாட்டு தகவல்…

ஆடு, மாடுகளும் ஆதார் எண்ணுடன் இணைப்பு – குஜராத் இதிலும் முதலிடம்?..!!

குஜராத் மாநிலத்தின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத் நகரம் பட்டுத் துணி உற்பத்தி மற்றும் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தியான நகரமாகும். இந்நகரில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி அலுவலக…

2 பொருளாதார நிபுணர்கள் நீக்கம் – இம்ரான்கான மீது முன்னாள் மனைவி ஜெமீமா பாய்ச்சல்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முதல் மனைவி ஜெமீமா கோல்டுஸ்மித். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கோடீசுவரரின் மகள். இவர் இம்ரான்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…

2022-க்குள் ஊழலற்ற, ஏழ்மையற்ற, சாதி-மதமற்ற இந்தியா – பாஜக தேசிய செயற்குழுவில்…

டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற…

ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தாக்குதல் – படைவீரர்கள் 9 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராத் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து மீட்புப்…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை – கொல்கத்தா நகராட்சியின் புதிய திட்டம்..!!

அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றன. இந்நிலையில்,…

தெற்கு சூடான் விமான விபத்தில் 21 பேர் பலி..!!

தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள்…

உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கிறதா? அப்போ இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..! உஷார்..!!…

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவை பொறுத்தவரையில் பல பிரச்சினை உள்ளது. ஒரு சிலருக்கு பசியே எடுக்காது, இன்னொரு சிலருக்கு உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். அதிலும் சிலருக்கு சாப்பிட்டு முடித்த உடனேயே பசி உணர்வு ஏற்படும். இது…

அனைத்து சாப்பாட்டுக் கடை உரிமையாளர்களுக்கும்..!!

அனைத்து உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளும் ஸ்ரீலங்கா தரநிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்படும் தரச்சான்றுதலான ஜீஎம்பி சான்றிததழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரமானதும் பாதுகாப்பானதுமான வேலைத்திட்டம் ஒன்றை…

நல்லூர் வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கம்..!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம், இன்று(09) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று நேற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது. மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத்…

நெடுங்கேனி வெடுக்குநாரி ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகள்…

நெடுங்கேனி வெடுக்குநாரி ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம் வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.…

அரியானாவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து – 6 பேர் பலி..!!

அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் உள்ள நெருஞ்சாலையில் இன்று மாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து…