உக்ரைனின் புதிய பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ
உக்ரைனின் துணை பிரதமராகவும், பொருளாதார அமைச்சராக பொறுப்பு வகிக்கும் யூலியா ஸ்விரிடென்கோவை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்க அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளாா்.
ரஷியாவின் படையெடுப்புக்கு இடையே நடைபெறும் இந்த நியமனம் நாட்டின் முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. இது குறித்து சமூக ஊடகத்தில் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் அரசை யூலியா ஸ்விரிடென்கோ வழிநடத்தி, அதன் செயல்பாடுகளில் கணிசமான புதுமைகளை ஏற்படுத்த வேண்டும் என்று என்று நான் பரிந்துரைத்துள்ளேன். புதிய அரசின் செயல் திட்டம் விரைவில் முன்வைக்கப்படும் என்று எதிா்பாா்க்கிறேன்.
நிா்வாகக் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர இந்த நிமயனம் அவசியமானது என்று அந்தப் பதிவில் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளாா்.
அதிபரின் இந்த அமைச்சரவை மாற்ற அறிவிப்புக்கு முன்னதாக, தனது பதவியை தற்போதைய பிரதமா் டெனிஸ் ஷ்மைஹான் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.