;
Athirady Tamil News
Daily Archives

3 August 2022

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள்…

மழை மற்றும் காற்று நிலைமை தொடர்பான அறிவிப்பு!!

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மாநிலம் முழுவதும் 95 நிவாரண முகாம்கள்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்…

ஜோசப் ஸ்டாலின் கைது !!

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக…

கல்முனை IOC யில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்!!…

கல்முனை IOC எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டன. கல்முனை திலகா எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்களின் ஆலோசனை…

யாழ். பல்கலையில் மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழியல் மற்றும் தமிழிசை வளரச்சிக்கென சிங்கப்பூர் எஸ்றேற்றர் கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறையினால் நடாத்தப்பட்ட மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு ஆகஸ்ட் 03ஆம்…

மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்து- பெண்கள் உள்பட 7 பேர் பலி..!!

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள டெஹ்ரி…

முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது !!

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, காலத்துக்கேற்ற முடிவு, இது மூத்த தமிழ் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்…

இலங்கை திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!!

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.…

காமன்வெல்த்: வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து…

தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 150 பெண்கள் திடீர் மயக்கம்..!!

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான துணி நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து…

கேரளாவில் கனமழைக்கு 12 பேர் பலி;10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்கிறது. இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல்…

“கோட்டா கோ கம”வில் சலசலப்பு: வெள்ளிவரை காலக்கெடு !!

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5…

தூண்டிலில் சிக்கிய பாரிய எடையுள்ள கொடுவா மீன்!! (படங்கள், வீடியோ)

25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது. இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு…

மாநிலங்களவையில் காரசார விவாதம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன்…

விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு காரசாரமாக கருத்துகளை…

வவுனியா- ஆச்சிபுரம் இளைஞர் படுகொலை தொடர்பில் 7 பேர் கைது: துப்பாக்கி மற்றும் வாள்களும்…

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (03.08) தெரிவித்துள்ளனர். வவுனியா,…

யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோவால் மரணம்!!

யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட…

அடுத்தவாரம் பாராளுமன்றில் நடக்கப்போவது என்ன !!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை இன்று (03) நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (03) கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதில்,…

ஜனாதிபதி ரணிலுக்கு அவசர கடிதம்

வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் மூன்று தசாப்தமாக நீங்கள் கண்ட பெருங்கனவு பேரதிஸ்ரமாக நிறைவேறியுள்ளது. ஆகவே இலக்கை…

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில்…

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டியது. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி…

இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? – மத்திய மந்திரி மாண்டவியா…

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத்தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் எத்தனை பேருக்கு பாதித்து இருக்கிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று…

குஜராத்தில் முன்னணி தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ரூ.1,000 கோடி கருப்பு பணம்…

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில்…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன்..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து…

தேக்கு மரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது !!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில், 9ம் கட்டைக்கும் கற்குவாரிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேக்கு மரக் குற்றிகளை களவாக ஏற்றிச் சென்றவர்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். வாகனத்தில் தேக்கு மரக் குற்றிகள் இருப்பதை கண்ட…

ஆண்டு இறுதி வரை இதை தாங்கிக் கொள்ள வேண்டும் !!

இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத்…

கத்தியால் குத்திய மாணவ காதல் !!

தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன்…

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவோம்: ஜனாதிபதி !!

" இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் என அழைத்தார். ஆகையால், சர்வக்கட்சி…

ஆற்றங்கரையில் சுற்.றித்திரிந்த முதலை..!!

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியா கிராமத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஆற்றில் இருந்து வெளியேறிய ஒரு முதலை ஆற்றங்கரையில் உலா வந்தது. அந்த முதலை…

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்! (மருத்துவம்)

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க…

கர்நாடகத்தில் மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ்…

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு-நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கனமழை கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின்…

முஸ்லிம் சமூகத்துக்கான சரியான அரசியல் வழித்தடம் எது? (கட்டுரை)

இலங்கையின் அரசியல், வேறு விதமான பரிமாணத்தை எடுத்து, மாறுபட்ட வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் எவ்வாறு முன்னகரப்போகின்றது என்ற கேள்வி, சிந்திக்கும் ஆற்றலுள்ள முஸ்லிம் மக்களுக்கு…

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என தெரியாது; சித்தராமையா பேட்டி..!!

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முக்கியமான கட்டம்…

மாவிட்டபுரத்தானுக்கு கோடி நாமாஞ்சலி ஆராதனை – உபயங்களை ஏற்க விரும்புபவர்கள்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி ஆராதனை கடந்த திங்கட்கிமை முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 2023ஆம் ஆண்டு 26ஆம் திகதி வியாழக்கிழமை…