;
Athirady Tamil News

முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..? (கட்டுரை)

0

வாட்ஸ்ஆப் செயலி மூலம் தகவல்களை மிகவும் வேகமாக பறிமாறி கொள்ள முடியும் இந்த காலத்தில் அதன் மூலம் பிரச்சனைகளும் வேகமாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு தான் அதிக பிரச்சனை, வாட்ஸ்ஆப் காதல் குறித்து பல செய்திகளை அனைவரும் படிக்க தான் செய்கின்றோம்.. நமக்கு இவ்ளோ பெரிய பிரச்சனை இல்லைங்க, என்பவர்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் நிச்சயம் இருக்க தான் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வாட்ஸ்ஆப் சாட் ஸ்கிரீன் செல்ல வேண்டும்.

சாட் ஸ்கிரீனின் மெனு ஆப்ஷனில் செட்டிங்ஸ் >> அக்கவுன்டு >> ப்ரைவஸி>> ப்ளாக்டு காண்டாக்ட் செல்ல வேண்டும்.

இப்பகுதியில் நீங்கள் ப்ளாக் செய்ய வேண்டிய காண்டாக்ட்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.

ப்ளாக் செய்த காண்டாக்ட்களை அன்ப்ளாக் செய்ய ப்ளாக்டு காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை அழுத்தி பிடித்து அன்ப்ளாக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

காண்டாக்ட்களை ப்ளாக் செய்த பின் என்னவாகும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஒரு முறை நீங்கள் காண்டாக்ட்களை ப்ளாக் செய்தால் அந்த காண்டாக்டில் இருந்து குறுந்தகவல்கள் உங்களுக்கு வராது.

நீங்கள் ப்ளாக் செய்த காண்டாக்ட்களுக்கு உங்களது லாஸ்ட் சீன் தகவல்களோ, ஆன்லைன் குறித்த எவ்வித தடையமும் இருக்காது.

நீங்கள் செய்த ஸ்டேட்டஸ் மாற்றங்கள் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.

நீங்கள் மேற்கொண்ட ப்ரோஃபைல் புகைப்பட மாற்றங்களும் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.

ப்ளாக் செய்த நபரை அன்ப்ளாக் செய்யாத வரை உங்களால் அவருக்கு மீண்டும் அழைப்புகள், குறுந்தகவல்கள் என எதையும் மேற்கொள்ள முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.