;
Athirady Tamil News

இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: “நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்” குற்றவாளி வாக்குமூலம்!

0

வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரி
வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தரும் புதிய விவரங்களை பெடரல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், அமெரிக்கப் பெண் ஒருவரும் இஸ்ரேலிய ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யவிருந்த காதலர்கள் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் இஸ்ரேலிய குடிமகனான யாரோன் லிஷின்ஸ்கி(aron Lischinsky) மற்றும் அமெரிக்கரான சாரா மில்கிராம்(Sarah Milgrim) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் கைது
இந்த சம்பவத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட 31 வயதான எலியாஸ் ரோட்ரிகஸ்(Elias Rodriguez), “நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன், காசாவுக்காக செய்தேன்” என்று வெளிப்படையாக தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, ரோட்ரிகஸ் “பாலஸ்தீனத்திற்கு விடுதலை” என்று கோஷமிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை தான் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோட்ரிகஸ் தற்போது வெளிநாட்டு அதிகாரிகளைக் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அருங்காட்சியகத்திற்கு வெளியே நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சிகள் பதிவு செய்துள்ளன.

அதில், பாதிக்கப்பட்டவர்கள் கீழே விழுந்த பின்னரும் ரோட்ரிகஸ் அவர்களை பலமுறை சுட்டது தெளிவாகத் தெரிவதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விசாரணையில், ரோட்ரிகஸ் 2024 பிப்ரவரியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே தன்னைத் தானே எரித்துக்கொண்ட ஒருவரைப் புகழ்ந்ததும், அவரை “தைரியமானவர்” மற்றும் “தியாகி” என்று வர்ணித்ததும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.