;
Athirady Tamil News

பாதுகாப்பான நிலையான உணவு அணுகுமுறை !! (கட்டுரை)

0

உணவுப் பாதுகாப்பு என்பது தனிநபர் நலன் என்பதற்கு அப்பாற்பட்டதாகும்; தேசம் ஒன்றின் ஒட்டுமொத்த நலன் மற்றும் பொருளாதார தேர்ச்சியில் அது மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. உணவுத் துறையின் பெரும் ஆற்றலை ஏதுவாக்குவது மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரதும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை காக்கும் உணவுப் பாதுகாப்புக் கொள்கைகளின் நவீனமயமாக்கலை முன்னிலைப்படுத்தலில் இந்த கருத்தாக்கம் தங்கியுள்ளது.

பாதுகாப்பற்றவை உணவு அல்ல. உலகளாவிய ரீதியில், மாசடைந்த உணவுகள் சுமார் 420,000 உயிரழப்புக்களுக்கு காரணமாகியுள்ளன. பாதுகாப்பற்ற உணவு என்பது பொருளாதார வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்து, குறைந்த-மற்றும்-நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் 95 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருடாந்த உற்பத்தித்திறன் இழப்புக்கு வழிகோலியுள்ளது.

இலங்கையில், மேம்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பின் பயன்கள் தொடர்பில் UNIDO இனால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய கற்கையானது, 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடும், உணவுப் பாதுகாப்பு சவால் முகாமைத்துவ மேம்படுத்தல்ககளுக்கு வருடாந்தம் மொத்த வரவு-செலவுத் திட்ட உறுதிப்பாடான 9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருடாந்தம் ஆகக் குறைந்த 113 உயிர்களை காப்பாற்றுவதாகவும், வருடாந்த ஏற்றுமதி மதிப்பை குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்கும் எனவும், அதாவது தசாப்தம் ஒன்றில் 24 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது.

பொது சுகாதார துறையில் 70 வருடங்களுக்கு மேற்பட்ட செழிப்பான வரலாற்றுடன், இலங்கையானது உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க தேர்ச்சியை எட்டியுள்ளது. எவ்வாறாயினும், காலங்கடந்த ஒழுங்குவிதிகள், போதியதல்லாத நிறுவன ஒருங்கிணைப்பு, மற்றும் விவசாய நிலம் முதல், உணவு பரிமாறும் மேசை வரை முழுமையான கண்காணித்தல் பயிற்சிகள் இன்மை என்பன நாட்டின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பிற்கான மறுசீரமைப்புக்கான பெரும் தேவையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு அவசியத்தை அறிந்துணர்ந்து, ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி நிறுவனம் (UNIDO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) என்பன ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பரந்த மனப்பான்மையுடன் நிதியுதவியளிக்கப்பட்ட BESPA-FOOD செயற்றிட்டத்தில் ஒன்றிணைந்துள்ளன.

ஒழுங்குவிதிகளை பின்பற்றல், தேசிய உணவுப் பாதுகாப்பு கொள்கையை மீளமைத்து உற்பத்தியாளர்கள், பதப்படுத்துவோர் மற்றும் உணவு தொழில் செயற்படுத்துனர்களின் ஆற்றலை பரவலாக்கல் மற்றும் நுகர்வோருக்கு முன்னுரிமையளிக்கும் விவசாய மற்றும் உணவுச் சங்கிலி முழுவதிலும் இணைப்பினை வளர்த்தல் மூலம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு முறைமையை வலுப்படுத்துவற்கு இந்த ஒருங்கிணைந்த திட்டம் இலக்கு வைத்துள்ளது.

போதியளவு, பாதுகாப்பான மற்றும் நிலையான உணவுக்கான சமமான அணுகும் வசதியை உறுதி செய்தல் – ஐரோப்பிய ஒன்றியம்

உணவுப் பாதுகாப்பு என்பது அனைவரதும் பிரச்சினையாகும். எமது உலகமயமான உலகில், உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்குரிய பிரச்சினையல்ல. அதன்காரணமாக நாம் ஒன்றாக செயற்படல் வேண்டும்.

ஐரோப்பாவில், எமது சூழலையும், எமது பூமியையும் பாதுகாக்க வேண்டுமாயின், நிலையான, நியாயமான, ஆரோக்கியமான மற்றும் சுற்றாடலுக்கு நெருக்கமான உணவு முறைமைக்கு மாறுவது அவசியம் என நாம் நம்புகின்றோம். அனைவருக்கும் போதியளவிலான, பாதுகாப்பான மற்றும் நிலையான உணவு இருப்பதனை நாம் உறுதி செய்ய வேண்டும்.

பசுமையான விவசாயம் மற்றும் சிறந்த உணவுக்கான இலட்சிய இலக்குகளை நாம் நிர்ணயித்துள்ளோம். எடுத்துக்காட்டாக, 2050 அளவில், உலகில் முதலாவது காலநிலை நடுநிலையான கண்டமாக மாறுவதற்கு ஐரோப்பா விரும்புகின்றது. அத்துடன், 2030இல், இன்னும் 7 வருடங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 சதவீதமான விவசாய நிலங்களை இயற்கை முறைக்கு மாற்றுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

உலகில் ஆகக் கூடிய உணவுப் பாதுகாப்பு தரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது. பக்கச்சார்பற்ற விஞ்ஞான ஆலோசனையை வழங்குவதில் மற்றும் உணவுச் சங்கிலியுடன் சம்பந்தப்பட்ட ஆபத்துக்கள் தொடர்பில் தொடர்பாடல் செய்யும் கடமையை ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அதிகார சபை (EFSA) கொண்டுள்ளது. உயர்தரமான, பாதுகாப்பான நியமங்கள் மற்றும் மூலம் தொடர்பான தெளிவான விபரங்களுடன் ஊட்டச்சத்துள்ள உணவினை உத்தரவாதப்படுத்துவதற்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவானது நுகர்வோருக்கு பாதுகாப்பாக இருப்பதனை இவை அனைத்தும் உறுதிசெய்தல் வேண்டும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய விவசாய-உணவு சங்கிலி எவ்வளவு முக்கியமானது என்பதனையும், உலகெங்கிலும் உள்ள சமுதாயங்கள் பாதுகாப்பான உணவிற்கான நம்பகமான அணுகும் வசதியை கொண்டிருப்பதற்கு உணவு விநியோகச் சங்கிலியில் தடைகளை குறைப்பது எவ்வளவு அத்தியாவசியமானது என்பதனையும் கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு என்பன வெளிக்காட்டியுள்ளன. பாதுகாப்பான உணவை வழங்கல் என்பது விவசாய நிலத்தில் இருந்து, உணவுண்ணும் மேசை வரையான உணவு விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்காளர்களினதும் பொறுப்பாகும்.

இலங்கையில், விவசாயம் மற்றும் உணவுத் துறையில் நீண்டகால பங்காளராக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இது எமது பிரதான முன்னுரிமைகளில் ஒன்றாகும். இதற்காக, நாட்டில் உற்பத்திதிறன் மிக்க, சந்தைக்கு ஏற்ற மற்றும் நிலையான விவசாயம் மற்றும் உணவுத் துறையை முன்னிறுத்துவதற்கு உதவித்தொகைகளில் 100 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகளவினை (31 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக) நாம் இதுவரை முதலீடு செய்துள்ளோம். இலங்கை உணவுப் பொருட்களின் போட்டித்திறன் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் நாம் உதவுகின்றோம்.

தற்போது,BESPA-FOODஎன்றழைக்கப்படும் செயற்றிட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தினை முன்னிறுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும் நாம் UNIDOமற்றும் குழு உடன் பணியாற்றுகின்றோம். இந்த 9.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான திட்டத்தில், அனைவருக்கும் பாதுகாப்பான உணவினை வழங்குவதற்கு உணவு உற்பத்தியில் சிறந்த பயிற்சிகள் மற்றும் தரங்களை முன்னிறுத்துவதற்கு நாம் விரும்புகின்றோம்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர கட்டமைப்பினை மாற்றுவதில் இலங்கையின் உணவுத் துறையின் வகிபாகத்தை அங்கீகரித்தல் – UNIDO

தரங்களுக்கு இசைவானதாக வெளிப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை வெளிப்படுத்தும் உற்பத்திகளை சந்தைகள் நன்கு எடுத்துக் கொள்கின்றன. பாதுகாப்பான, தரமான, சமூகப் பொறுப்புள்ள மற்றும் நிலைத்திருக்கும் தன்மையை உறுதி செய்வதில் தரங்கள் அடிப்படை வகிபாகத்தைக் கொண்டுள்ளன. நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு இருக்கும் போது, புறச்சுகாதார மற்றும் தாவரங்களின் ஆரோக்கியம் தொடர்பான (SPS) செயற்பாடுகள் உள்ளடங்கலாக தொழிநுட்ப ஒழுங்குவிதிகளை நோக்கியதாக தரங்கள் அமைகின்றன. இங்கே பொருந்திப் போதல் என்பது சட்டக் கடப்பாடாகின்றது.

சுகாதாரம், நியாயமான வர்த்தகம், மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்திருக்கும் தன்மை என்பன தொடர்பிலான சமூகம்சார் விழுமியங்களை பிரதிபலிக்கும் நியமங்களுக்கு இயல்பாகப் பொருந்திப் போதலுடன் நுகர்வோரிஸம் என்பது படிப்படியாக பிணைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சுயக்கட்டுப்பாட்டு முறையில் நியமங்கள் பிரயோகிக்கப்படுமாயின், உலகளாவிய ஒன்றித்துப் போதலை ஏற்றுமதி இயலுமையுடனான பெறுமதி சங்கலிகள் (VC) அதிகரிக்க முடியும். இறக்குமதி செய்யும் நாடுகளின் நுகர்வோர் முன்னுரிமைகள் இந்த விழுமியத்தை நோக்கி நகரும் போது, இயல்பான நியமங்களுக்கு இணங்குவதற்கான வர்த்தகச் சூழல் என்பது இலங்கையில் தெளிவாகின்றது.

இலங்கையில், சர்வதேச வர்த்தகத்திற்கான பொருத்தப்பாடு மற்றும் தரங்களை பாதிக்கும் சமூகப்பொருளாதார நிலைமைகளில் மோசமான விளைவுகளை குறைக்கும் வகையில் உணவுக் கட்டுபாட்டு முறைமைக்குள் எழும் தோல்விகள் திருத்தப்பட முடியும். உணவுப் பாதுகாப்பு நிலைமைகளை மேம்படுத்துவதில், மற்றும் HACCP போன்ற உணவுப் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைகள் (FSSM) சம்பந்தப்பட்ட அதிகரித்த செயற்படுத்தல் செலவுகளை தக்க வைத்தலில் விநியோகச் சங்கிலியுடன் உணவு தொழில் செயற்படுத்துனர்கள் (FBO) முதலீடு செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட கற்கையில், இதனை நோக்கியதாக உணவுத் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கான தெளிவான பொருளாதார பகுத்தறிவினை UNIDO முன்வைக்கின்றது.

பத்து வருட காலப்பகுதியில், 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவுத் தொழில்துறைக்கு அதிகரித்த முதலீடு மற்றும் செயற்படுத்தல் செலவுகள் மேலதிக 2.5 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்பதுடன், குறித்த துறையில் 6 சதவீதமாகவுள்ள விவசாய மற்றும் உணவுத் தொழில்துறைகளின் 122,236 நபர்களின் வேலைவாய்ப்பினை காக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்களைப் பெறுவதற்கு, ஏற்றுமதி செய்யும் உணவுத் தொழில் செயற்படுத்துனர்கள் மற்றும் அவர்களின் விநியோகஸ்தர்கள், 3,823 அமைப்புக்கள், கருவி, ஊழியர் பயிற்சி மற்றும் வலுவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைமைகளின் புதுப்பித்தலுக்கான மொத்தம் 822 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உத்தேச முதலீட்டுடன் இணைக்கப்படல் வேண்டும். வருடம் ஒன்றுக்கு சராசரியாக 43 மில்லியன் அமெரிக்கடொலர்கள் வருடாந்த செயற்படுத்தல் செலவினையும் ஏற்றுமதி விநியோகச் சங்கிலிகளையும் செயற்படுத்துனர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கமைய, தேவையான நிதியிடலை பெற்றுக்கொள்வதற்கு கருவிகளின் அபிவிருத்திக்கும் அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும்.

உணவுக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் பிரதான நிறுவனம்சார் மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களின் சுயாதீனத்தன்மையுடன், உணவுக் கட்டுப்பாடுகளின் சுயக்கட்டுப்பாட்டு பிரயோகத்திற்கு வழிகோலும் பொதுவான பயிற்சிகளை உணவுத் தொழில்துறையானது கூட்டாக விளக்குவதும் மற்றும் பின்பற்றுவதும் மிகவும் முக்கியமாகும்.

சம்பந்தப்பட்ட திறன்மிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், நியமங்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்புகள் என்ற வடிவத்தில் நெறிமுறைசார் ஆவணங்களை UNIDO அபிவிருத்தி செய்வதுடன், தெங்கு, வெனிலா, வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு என்பவற்றை உள்ளடக்கிய BESPA-FOOD செயல்திட்டம் தெரிவு செய்த பெறுமதி சங்கிலிகளுக்கான விவசாய-உணவுத் தொழில்துறைக்கு பயிற்சி மற்றும் பிரத்தியேகமான தொழிநுட்ப உதவியை வழங்கி வருகின்றது. தற்போதுள்ள நெறிமுறைசார் ஆவணங்களில் உள்ள இடைவெளிகயை நிரப்புவதற்கு அப்பால், நெறிமுறைசார் அபிவிருத்திச் செயற்பாடுகளில், குறிப்பாக சர்வதேச நியமப்படுத்தல் மன்றில் இலங்கையின் வினைத்திறன் மிக்க பிரநிதித்துவத்திற்கான நியமப்படுத்தலில் ஈடுபடுத்துவதற்கு உணவுத் தொழில்துறைக்கு UNIDO அதிகாரமளிக்கின்றது.

மேலும், நியமங்களின் சுயக்கட்டுப்பாட்டு பிரயோகத்தை முதன்மைப்படுத்துவதற்கு, FSMS நியமங்கள், தர முகாமைத்துவ முறைமை (QMS) நியமங்கள், மற்றும் ஏனைய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர கருத்தாக்கங்களை பிரயோகிப்பதில் உணவுத் தொழில் செயற்படுத்துனர்களை இயலுமைப்படுத்துவதற்கு தேவையான தொழிநுட்ப உதவியை UNIDOவழங்குகின்றது.

அத்தகைய தரங்களுடன் பொருத்தப்பாட்டினை வெளிப்படுத்தும் FBO,id ஏதுவாக்கும் உள்ளகரீதியில் அணுகக் கூடிய, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இணக்க மதிப்பீடு சேவைகளுக்கான அணுகம் வசதியை அதிகரிப்பதற்கு, பரிசோதித்தல், அளவுத்திருத்தம், மேற்பார்வை, உற்பத்தி முறைமைகள் சான்றளித்தல், மற்றும் சரிபார்த்தல் மற்றும் பெறுமதி சேர்த்தலில் புதிய மற்றும் பரவலாக்கப்பட்ட சேவைகளின் சான்றளித்தலை நோக்கி தேசிய தர உட்கட்டமைப்பு (NQI) நிறுவனங்கள் மற்றும் 28 இணக்க மதிப்பீட்டு அங்கங்களினை (CAB) UNIDO இயலுமைப்படுத்துகின்றது

அத்தகைய செயல்திட்ட இடையீடுகளின் ஊடாக உணவு தொழில்துறையுடன் இணைந்து, தமது வகிபாகம், உரிமைத்துவம், மற்றும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சூழலை மாற்றுவதில் தாக்கம் என்பவற்றை முழுமையாக அங்கீகரித்த உணவுத் தொழில் துறை ஒன்றை காண்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

உணவுப் பாதுகாப்பு கொள்கை மறுசீரமைப்புகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வின் முக்கியத்துவம் – FAO

தற்போது, இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை நிர்வகிக்கும் நியமங்கள் 1980ஆம் ஆண்டு உணவுச் சட்டம் மற்றும் இலங்கையின் நியமங்கள் நிறுவனம் ஆகிய இரண்டு பிரதான புள்ளிகளில் இருந்து வருகின்றன. பதப்படுத்தல், தயாரித்தல் மற்றும் சில்லறை விற்பனை சம்பந்தப்பட்ட தர மற்றும் பாதுகாப்பு அளவுருக்களை தற்போதுள்ள சட்டங்கள் அடையாளப்படுத்துகின்றன.

நுண்ணுயிர் தரநிலைகள் போன்ற குறிப்பிட்ட அளவுருக்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், அணுகுமுறை என்பது ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியை இலக்கு வைக்கவில்லை. உற்பத்தியாளர்கள், சேமிப்பகம் மற்றும் போக்குவரத்து செய்வோர், செயற்படுத்துனர்கள், வர்த்தகர்கள், மற்றும் சில்லறை வியாபாரிகள் கடுமையான பாதுகாப்பு செயலேற்பாடுகளை பின்பற்றுவதனை உறுதி செய்து ஒட்டுமொத்த உணவு மதிப்புச் சங்கிலியை ஒழுங்குவிதிகள் உள்ளடக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு கொள்கையை வினைத்திறன் மிக்க வகையில் வலுப்படுத்துவதற்கு, கரிசனை மிக்க பல்வேறு பிரதான பகுதிகளை இலங்கை அடையாளப்படுத்தல் வேண்டும். கட்டுப்பாட்டு வரைபுநகல்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தல், விநியோகச் சங்கிலி கண்டுபிடிக்கக் கூடிய தன்மையை பரவலாக்கல், உணவு உற்பத்தியின் அனைத்து படிநிலைகளிலும் சுகாதார பயிற்சிகளை மேம்படுத்தல், மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரித்தல் என்பன இந்தச் செயற்பாட்டில் மிக முக்கியமான படிநிலைகளாகும். ;. BESPA-FOOD ஊடாக FAOஆனது சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் பணியாற்றும். மேலதிகமாக, உட்கட்டமைப்பு, இயலுமை கட்டியெழுப்பல், மற்றும் தொழிநுட்ப முன்னேற்றங்களில் முதலீடுகள் வினைத்திறன் மிக்க கண்காணித்தலையும், உணவுப் பாதுகாப்புத் தரங்களின் அமுலாக்கலையும் ஏதுவாக்கும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் இடையிலான மற்றும் புறப் பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது கொள்கை நடைமுறைப்படுத்தலின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகும். இது தொடர்பில், தற்போதுள்ள உணவு ஆலோசனைக் குழுவானது குறிப்பிடத்தக்க தேர்ச்சியை அடைந்துள்ளது. நீடித்த மாற்றத்தை எட்டுவதற்கு, முறைசார் பொறியமைப்புக்களின் ஊடாக ஒருங்கிணைப்புகள் வினைத்திறன் மிக்கதாக அமைதல் வேண்டும். அரசாங்கம், உணவுசார் அதிகாரிகள், தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பிரயோகிப்பதன் பயன்களைப் பெறுவதற்கு ஒன்றுடன், ஒன்று இணைந்து பணியாற்ற வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு கொள்கையின் பயன்கள் பரந்தளவிலானவை. விவசாய மற்றும் உணவுத் தொழில்துறைகளில் அதிகரித்த வெளிநாட்டு முதலீட்டினை இலங்கை ஈர்க்க முடியும், தமது ஏற்றுமதி சந்தை பங்கினை பரவலாக்க முடியும் என்பதுடன் தமது உணவு வகைகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை வருகை தருபவர்களுக்கு உறுதி செய்வதன் மூலம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும். மேலும், உறுதியான பாதுகாப்பு ஆளுகை என்பது உணவு இழப்பு மற்றும் கழிவினை குறைத்து, உணவுப் பாதுகாப்புக்கு பங்களித்து, வளங்கள் மீதான கறையை குறைக்கும்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் செயற்றிறன் மிக்க பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வில் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது. நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் கல்வி என்பவற்றை துரித உணவுப் பாதுகாப்பு கொள்கை ஒன்றிற்கான அடிப்படைத் தூண்களாக BESPA-FOOD ஊடாக FAOஆனது அங்கீகரிக்கின்றது. தாம் உட்கொள்ளும் உணவு குறித்த தகவலறிந்த தெரிவுகளை எடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் இலங்கை நுகர்வோர் அதிகாரமளிக்கப்படல் வேண்டும். தரச் சான்றிதழ்கள், பெயர் பட்டியல்கள், மற்றும் சுகாதார நியமங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலும் இதில் உள்ளடங்கும்.

தனிப்பட்ட குடும்பங்களுக்கு அப்பால் நுகர்வோர் கல்வி பரவலாக்கப்படல் வேண்டும் என FAOநம்புகின்றது. உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிறுத்துவதில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமுதாய நிறுவனங்கள் முக்கியமான பங்கினை ஆற்றுகின்றன. பாடசாலை பாடவிதானத்திற்குள் உணவுப் பாதுகாப்புக் கல்வியை உள்ளடக்குவது என்பது, வாழ்நாள் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவதுடன், தமது ஆரோக்கியம் மற்றும் நலனை காப்பதற்கு தகவலறிந்த தீர்மானங்களை எடுக்கக் கூடிய தகவலறிந்த நுகர்வோர் தலைமுறையினை உருவாக்கும். எமது உணவானது ஆபத்துகளின்றி இருத்தல், ஆரோக்கியமான சனத்தொகையை முன்னிறுத்தல் மற்றும் அதிகரித்த நுகர்வோர் நம்பிக்கை மற்றும் சந்தை சந்தர்ப்பங்களின் ஊடாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் என்பவற்றை வலுவான உணவு பாதுகாப்பு முறைமை என்பது உறுதி செய்யும்.

பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான உணவுத் தொழில்துறையை நோக்கிய இலங்கையின் பயணம் என்பது, சந்தேகத்திற்கிடமற்ற வகையில் சவால் மிக்கதாகும். ஆனாலும், அதன் வெகுமதிகள் அளவிட முடியாதவையாகும். ஓன்றாக பணியாற்றுவதன் மூலம், உணவு என்பது ஒரு சலுகையாக அன்றி, இலங்கையர்கள் அனைவருக்குமான உரிமையானதாக அமையும் பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுடனான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்ப முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.