;
Athirady Tamil News

“கள்ளக் காதல்”? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில், இளம்குடும்பப் பெண் தற்கொலையா? அன்றில் கொலையா?? (படங்கள்)

0

“கள்ளக் காதல்”? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில் இளம்குடும்பப் பெண் தற்கொலையா? அன்றில் கொலையா?? (படங்கள்)

யாழில் தமிழ் அரசு கட்சி பிரமுகரின் வீட்டில் தனக்குத்தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் மரணம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும், வலிகாமம் வடக்கின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் சுகிர்தனின் வீட்டில் தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான பாலகிருஷ்ணர் விஜிதா என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர். அவருக்கு 10 வயதான பெண்பிள்ளை உள்ளது. அவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்திற்கான சட்டபூர்வ செயற்முறை நடந்து வருகிறது.

சுகிர்தன் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர். அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருகிறார். பல வருடங்களின் முன்னரே அவரது மனைவி வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணும், வலி வடக்கு தவிசாளரும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டிலேயே சுகிர்தன் உணவருந்துவதாகவும், அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும், கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து பெற்றோலுடன் அவர் புறப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை பிள்ளையிடம் காண்பித்து விட்டு, தெரிந்தவர் ஒருவரிடம் பெற்றோல் கொடுத்து விட்டு வருகிறேன் என குறிப்பிட்டு விட்டே வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகிர்தனுடன் நெருக்கமாக பழகிய இளம் குடும்பப் பெண்ணொருவரே அவரது வீட்டில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவர் முதலில் தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து, கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வலி வடக்கு தவிசாளரின் வீட்டிற்கு சென்று, வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்ததுடன், கிண்றுக்குள் குதித்ததாகவும் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீக்காயமடைந்த நிலையில் அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில், சுகிர்தன் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து சுகிர்தன் விடுவிக்கப்பட்டார். இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல். தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும்.

மேற்படி சுகிர்தன் தமிழ் அரசுக் கட்சி முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரனின் மிக நெருங்கிய கூட்டாளி என்பதுடன், இதேவேளை இவரின் மிக நெருங்கிய நண்பர்களான தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரிப் பிரதேச முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரன் போன்றோரும் இவரின் நண்பர்கள் என்பதுடன், இவர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அப்பிரதேச மக்கள் அங்கலாய்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.