தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)
#################################
கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரோன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக் கிராமத்தில் கொண்டாடினார்.
புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரான கனடாவில் வதியும் இந்திரன் என அன்புடன் அழைக்கப்படும், ஆபிரகாம்லிங்கம் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரன் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு இந்திரன் கவிதா குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி நிகழ்வு நடத்தப்பட்டது.
செல்வன் அரனின் பிறந்தநாளில் வன்னி எல்லைக் கிராமமொன்றில் மாணவ,மாணவிகளான சிறுவர்கள் அவர்களின் பெற்றோர், உறவுகள் ஒன்று கூடி அவருக்கு பிறந்தநாள் பாட்டிசைத்து கேக் வெட்டி மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். செல்வன் ஆரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிய சிறுவர்கள் பிறந்தநாள் கேக்கினை உண்டு மகிழ்ந்ததுடன், கலந்து கொண்டோருக்கு சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் திட்டத்தின் கீழ், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவமாணவிகளின் அத்தியாவசியத் தேவை கருதி தண்ணீர் போத்தல்களும் செலவன்.ஆரனின் பிறந்தநாள் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க கனடாவில் வசிக்கும் ஆரோன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வவுனியா கற்பகபுரம் அறநெறி கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல் வழங்கி வைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு கனடாவில் வசிக்கும் ஆரோன் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
வவுனியா கற்பகபுரம் அம்மன் ஆலயத்தின் உறுப்பினர் சண்முகம் குழந்தைவேலு அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் அறநெறி ஆசிரியர் திருமதி. சிவந்தி குலநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.திருமதி. இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அரண் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு தமது நிதிப் பங்களிப்பில் சிற்றுண்டிகள் வழங்கி வைத்தமைக்காகவும், மற்றும் மாணவமாணவிகளின் அத்தியாவசிய தேவை கருதி தண்ணீர்ப் போத்தல்கள் வழங்கி வைத்தமைக்காகவும், மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.07.2025
தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos