அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி முத்தமிழ் விழா

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி முத்தமிழ் மன்றம் முன்னெடுத்த முத்தமிழ் விழா 16/7/2025 புதன்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் அருட்சகோதரி மேரி ஜெயமலர் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய தமிழ் பாடப்பிரதி கல்விப் பணிப்பாளர் இ. இராஜமோகனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசனும் கௌரவ விருந்தினராக முன்னாள் அதிபர் அருட்சகோதரி மேரி எத்தல் வீவா தமிழ் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இ. குணேஸ்வரி கார்மேல் கன்னியர் சபை மூத்த அருட் சகோதரி திரேசாராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்
புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 1946 இல் சேர் சிற்றம்பலம் கார்டினரால் உருவாக்கப்பட்டு கார்மேல் சபையினரால் நிர்வகிக்கப்பட்ட பெண்கள் பாடசாலை ஆகும்.