;
Athirady Tamil News

பிறந்தநாளை முன்னிட்டு, சுவிஸ் செல்வன்.ஆதி “M.F” ஊடாக வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்.. (படங்கள் & வீடியோ)

0

பிறந்தநாளை முன்னிட்டு, சுவிஸ் செல்வன்.ஆதி “M.F” ஊடாக வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் ஆதியின் பிறந்தநாளில் “ஆதவன் விளையாட்டு கழகத்திற்கு” உதவி வழங்கியது -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
##############################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாளான இன்று 12 02.2021 வெள்ளிக்கிழமை வவுனியா புதிய கற்பகபுரத்தில் இயங்கும் “ஆதவன் விளையாட்டுக் கழகத்திற்கு” ஆதியின் நிதிப் பங்களிப்பில் விளையாட்டு உபகரணங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

புதிய கற்பகபுரம் கிராமமானது புதிய குடியேற்றக் கிராமமாகும். தற்போது தான் அங்கே சில அடிப்படை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகி வருகிறது.. “ஆதவன் விளையாட்டுக் கழகம்” தனியார் காணியில் தினமும் மாலை நேரத்தில் இளைஞர்கள் ஒன்றுகூடி விளையாடி வருகின்றனர்.

சமீபகாலமாக விளையாட்டு பொருட்கள் சேதமடைந்தபடியால் மாலைநேர விளையாட்டில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது. இவ்விடயத்தை விளையாட்டு கழக வீரர்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கவனத்திற்கு கொண்டு வந்தனர் .

இதன் பயனாக இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆதி அவர்கள் தனது ஆடம்பர கொண்டாட்டத்தை தவிர்த்து அந்த நிதியினை இவ்வாறான தேவையுடையோர்க்கு கொடுத்துதவும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” கேட்டுக் கொண்டதின் அடிப்படையில்,..

இன்றைய நாளில் புதிய கற்பகபுரம் ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் அதன் தலைவர் திரு.மயூரன் செயலாளர் திரு.சுகிரதன் மற்றும் கழக முன்னணி வீரர்களிடம், இன்றைய நிகழ்வின் கௌரவ அழைப்பாளராக வந்து கலந்து கொண்ட கௌரவ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சமை உறுப்பினர் திரு.சிவகுரு விஜயகுமார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய பிறந்த நாள் நாயகன் ஆதி அவர்களால் வழங்கப்பட்ட விளையாட்டு பொருட்களைப் பாவித்து விளையாடி மகிழ்ந்த ஆதவன் விளையாட்டு கழகத்தினர், செல்வன்.ஆதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தினையும், இதனை ஒழுங்குபடுத்தித் தந்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” நன்றியினையும் தெரிவித்தனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

12.02.2021

தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.