;
Athirady Tamil News

எல்லோரும் உணர்ச்சிவசப்படுறாங்க… ட்ரம்பின் கோபம் குறித்து ரஷ்யா அளித்த விளக்கம்

0

விளாடிமிர் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபம் மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா நன்றி
ஆனால் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உதவியதற்காக அமெரிக்கத் தலைவருக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதன் மூலம் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அத்துடன் ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாகவும் அவர் கூறினார், கூடவே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் அவர் கடுமையாக திட்டியுள்ளார்.

இந்த நிலையில் புடின் பற்றிய ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டபோது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

முக்கியமான தருணம்
இந்தப் பேச்சுவார்த்தை செயல்முறையை ஒழுங்கமைத்துத் தொடங்குவதற்கு உதவிய அமெரிக்கர்களுக்கும், ஜனாதிபதி ட்ரம்பிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றார்.

அதே நேரத்தில், இது ஒரு மிக முக்கியமான தருணம், இது நிச்சயமாக, அனைவரின் உணர்ச்சி மிகுந்த சுமையுடனும் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளுடனும் தொடர்புடையது என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.