;
Athirady Tamil News

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை, ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)
##################################

சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. சுவிசில் வசிக்கும் திரு திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக பல்வேறு நற்பணிகளை குறிப்பாக பல்வேறு வாழ்வாதார உதவிகள் உட்பட தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு உதவி வரும் சுவிஸ் வாழ் உறவுகளான திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் இன்றைய நாளில் தமது இரட்டைச் செல்வங்களான செல்வி அபி, செல்வி அனு ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி பாட்டுப் பாடி குதூகலமாக கொண்டாடினார்கள். பெருமளவான தாயக உறவுகள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு செல்விகளான அபி, அனுவை மனதார வாழ்த்தி சென்றனர். அத்துடன் செல்விகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது இரட்டைப் புதல்விகளின் பிறந்தநாளில் தமது நிதிப் பங்களிப்பில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள் என பல தரப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டு கொண்டதிற்கிணங்க வவுனியா கிராமங்களில் உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு பல்வேறு வகைகளில் திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தாயக உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வகைகளில், இவ்வாறான பணிகளை செய்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இரட்டைச் செல்வங்களான அபி அனு ஆகியோரை தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.