;
Athirady Tamil News

சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில், வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி.. (படங்கள், வீடியோ)
############################

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் செல்வன்.சரண் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ். சரவணை மற்றும் நீர்கொழும்பை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான திரு திருமதி கலைச்செல்வம் தர்ஜினி தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன்.சரண் தனது பிறந்தநாளை தனது பெற்றோர், தங்கை யஷ்ணவி மற்றும் உறவுகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

செல்வன்.சரண் தனது பிறந்தநாளினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா எல்லைக் கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி “பெறுமதியான உலருணவுப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகள்” எனப் பல்வேறு உதவிகள் வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

செல்வன். சரணின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது தங்கை செல்வி.யஷ்ணவியின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது. செல்வன் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு செல்வன்.சரணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில், திருமதி. ரதிதேவி யதிஸ்கரன் (வவுனியா ஆனந்தபுரம் பிரதேச சமூர்த்தித் தலைவி) திருமதி. புஷ்பலதா தர்மகுலரட்ணம் (வவுனியா ஆனந்தபுரம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்க செயலாளர்) திரு. சங்கையா நமசிவாயம் (சமலங்குளம் ஆனந்தபுரம் “அபூர்வ ஆஞ்சநேயர்” ஆலயத் தலைவர்) ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொள்ள கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி கலைச்செல்வம் தர்ஜினி தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன்.சரண் அவர்களது பிறந்தநாள் ஆகிய இன்றையதினம் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு செல்வன் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தங்கை செல்வி.யஷ்ணவி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” வழங்கிய நிதிப்பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது..

வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோர் சிலருக்கு அவர்களின் வாசல் தேடிச் சென்று உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வன்.சரண் அவர்களுடைய பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.சரண் அவர்களை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய செல்வன்.சரணின் தங்கை யஷ்ணவிக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.08.2022

சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.