;
Athirady Tamil News

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா அன்பழகன்.. (வீடியோ படங்கள்)

0

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா அன்பழகன்.. (வீடியோ படங்கள்)
################################

அகவை ஐம்பது கண்டுவிட்டீர்…
மனதில் இன்னும் குழந்தைதான்…

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..

எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
இனிய அகவைதின நல்வாழ்த்துக்கள்!

தாயக சொந்தங்களான புங்குடுதீவில் பிறந்து, கனடா நாட்டில் வாழ்கின்ற “சந்திரா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சந்திரா அன்பழகன் அவர்கள் தனது ஐம்பதாவது பொன்விழாப் பிறந்தநாளை தனது தாய் நாட்டின் உறவுகளுக்கு பல்வேறு சமுக தொண்டுகள் மூலமாக இன்றையதினம் கொண்டாடினார்.

இன்றையதினம் காலை ஐம்பதாவது பிறந்தநாள் பொன்விழா காணும் சந்திரா என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி. சந்திரா அன்பழகன் அவர்கள், தனது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா தரணிக்குளம் பிரதேசக் கிராமங்களில் வாழும் தேவையுடைய கிராம மக்களுக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைத்தனர்.

மேற்படி இன்றுகாலை நடைபெற்ற நிகழ்வில், திருமதி சந்திரா அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக் கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு திருமதி.சந்திராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள முதியோர் சங்கத் கட்டிடத்தில் கலந்து கொண்ட முதியோர்கள் உட்பட கிராம மக்களுக்கு சுவையான விசேட விருந்துபசாரம் வழங்கி வைத்தனர்.

தான் பிறந்து வளர்ந்த ஊரான புங்குடுதீவில் மண் மீதும், புங்குடுதீவு மக்கள் மீதும் தீராத அன்பு கொண்டவரான இவர் கனடா நாட்டில் ஊர் சங்கத்தில் தன்னை இணைத்து பல தொண்டுகளை செய்து வருபவர் என்பதுடன், பல சமூக,சமய அமைப்புக்களில் பங்கெடுத்து சமுதாயப் பணிகளை தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி சந்திரா அன்பழகன் குடும்பத்தினர் தமது பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, இன்றையதினம் மதியம் மேற்படி நிகழ்வான “கிராம மக்களுக்கு சுவையான விசேட விருந்துபசாரம்” வழங்கி வைத்தனர்.

திருமதி சந்திரா அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் அன்பழகன், மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மேற்படி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கனடாவில் வதியும் திரு.குணராஜா உதயராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

அதேவேளை இந்நிகழ்வை வவுனியா மாவட்ட மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.நவரத்தினம் பவளராணி அவர்களின் ஒழுங்கமைப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், முதியோர் சங்கத் தலைவர் திரு.நாராயணசாமி முனுசாமி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.கருப்பண்ணன் வேலு, முதியோர் சங்க செயலாளர் திரு.முத்தழகு நாகையா, தலைவர் திருமதி.கமலேஸ்வரன் மேனகா, செயலாளர் திரு.சிவனு புகழ்செல்வம், உபசெயலாளர் திருமதி.கிருஷ்ணராஜா சுகந்தினி, கணக்காய்வாளர் திரு.சந்திரகாந்தன் கருணாசி, பொது உதவி செயலாளர் திருமதி.கிருஷ்ணமூர்த்தி ஜெகதாம்பாள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திரு.முத்தையா குருசாமி, முதியோர் சங்க உறுப்பினர் திருமதி.தங்கவேலு பார்வதி ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க அக்கிராமத்தில் வாழும் முதியோர், சிறுவர், சிறுமியர், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோருடன் அக்கிராமப் பொதுமக்களுமென இருநூறுக்கும் அதிகமானோர் விசேட விருந்துபசாரத்தில் கலந்து சிறப்பித்து இருந்தனர்,

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் திருமதி.சந்திரா அவர்களுடைய பொன்விழா பிறந்தநாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு “அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட” ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.சந்திரா அவர்களை “சமூக சேவையில் சிறந்து விளங்கி, மற்றவர்களின் நலனை தன்னலமாக கொண்டு, பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திருமதி சந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் அன்பழகன், மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தாயக உறவுகள் மற்றும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

23.09 2022.

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா அன்பழகன்.. (வீடியோ)

ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.