;
Athirady Tamil News

400 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு…!!

0

கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். 3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த குட்டித்தீவு சுமார் 400 ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தின் கிழ் இருந்து வந்தது.

இந்த தீவு 1996-ல் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், ராணி 2-ம் எலிசபெத்தே அதன் தலைவராக நீடித்தார்.

இந்த சூழலில் கடந்த 20 ஆண்டுகளில் இந்த தீவு, காலணி ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்தது. அதன்படி பார்படாஸ் நாடாளுமன்றம் தீவின் முதல் அதிபரை கடந்த மாதம் தேர்வு செய்தது. தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்து வந்த சாண்ட்ரா மோசன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பார்படாஸ் தீவு, சுதந்திர குடியரசாக மாறுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பார்படாஸ் அதிகாரபூர்வமாக குடியரசாக மாறியது. இதை கொண்டாடும் வகையில் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் கோலாகல விழா நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்துகொண்டார். பார்படாசின் கொடி, சின்னம் மற்றும் தேசிய கீதம் அப்படியே இருக்கும் எனவும், ஆனால் சில குறிப்புகள் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பார்படாஸ் 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.