;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம்..!!

0

திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.