;
Athirady Tamil News

சீனத் தூதுவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு!!

0

சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (27) பிற்பகல் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.

முன்னதாக அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற சீன தூதுவர் அஸ்கிரி மஹாநாயக்கரை தரிசித்தார். பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு வந்த சீனத் தூதுவர், மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கலவை தரிசித்து ஆசி பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சீன – இலங்கை உறவின் அண்மைக்கால வளர்ச்சி, இலங்கை பௌத்த மதத்திற்கு சீனா அளித்து வரும் மிகப்பெரிய நன்கொடை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.