;
Athirady Tamil News

விரைவில் இந்தியா வரும் ரெட்மியின் புது 5ஜி போன்..!!

0

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அடுத்த வாரமே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இதே ஸ்மார்ட்போன் ரெட்மி 10 5ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இந்தியாவில் புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் 6.58 இன்ச் IPS LCD 1080×2048 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13 கொண்டிருக்கும். இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.