போர் பயிற்சியில் சீன இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்
தாய்வானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய போர் பயிற்சியின்போது சீனா, தாய்வானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,
இராணுவப் பயிற்சிகள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சீனா வழக்கமாக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதால் தான் கவலைப்படவில்லை என்றார்.