;
Athirady Tamil News

பணவீக்க நெருக்கடி ; ஈரான் முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்கள்

0

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, ஈரானில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஈரானிய ரியால் (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையினால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளன.

இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

முன்னதாக, வர்த்தகர்கள் இடையே ஆரம்பமான குறித்தப் போராட்டம், தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் பரவியுள்ளது.

இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு உலகளவில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக சூரியனின் செய்தி பிரிவு மீளாய்வு செய்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.