;
Athirady Tamil News

ஒரு வாரமாக தொடரும் கைதிகளின் போராட்டம் உடல்நிலை கவலைக்கிடம். காப்பாற்றுமாறு உறவுகள் கோரிக்கை!!

0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

கைதிகளின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததால் போராட்டம் ஒரு வார காலமாக தொடருகிறது. இதனால் குறித்த கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்களை காப்பாற்றுமாறும் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களான் உ.உமாகாந்தன், ர.சயந்தன்ää வி.இன்பராஜ், ம.பார்த்தீபன், செ.உதயசிவம், பா. நகுலேஸ்வரன், சி.சிவாகரன், வே.சதீஸ்குமார், ச.சயிலன், இ.விவேகானந்தன், யோ.டட்லி, லு அயந்தன், யோ.அயந்தன் ஆகியோரே மேற்படி உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

குறித்த கைதிகளின் சட்டத்தரணிகள் சட்டமா அதிபருடன் கதைத்து கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்து தமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் இதற்கு உதவ வேண்டும் எனவும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.