துருக்கி மற்றும் டுபாயில் இருந்து வருகின்றது கோதுமை மா!!
எதிர்வரும் நாட்களில் துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கோதுமை மாவை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களில் கோதுமை மாவு பற்றாக்குறையாலும், இறக்குமதி தொடர்பான சிக்கல்களினாலும், கோதுமை மா மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.