;
Athirady Tamil News

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது: தெலுங்கானாவில் பயணம்..!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ‘இந்திய ஒற்றமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை கடந்த 23-ந்தேதி கர்நாடகாவின் ராய்ச்சூரை கடந்து தெலுங்கானாவில் நுழைந்தது. அத்துடன் தீபாவளிக்காக 3 நாட்கள் ஓய்வு விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லி திரும்பினார்.

வழிபாடு
இந்த 3 நாட்கள் ஓய்வுக்குப்பின் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் யாத்திரை தொடங்குகிறது. தெலுங்கானாவின் நாராயண்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட மக்தாலில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு இந்த யாத்திரை தொடங்குகிறது. 3 கி.மீ. பயணத்துக்குப்பின் அங்குள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் இந்த பயணம் தொடருகிறது. இன்று சுமார் 27 கி.மீ. பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி, இரவில் மக்தாலில் உள்ள ஸ்ரீபாலாஜி தொழிற்சாலையில் ஓய்வெடுக்கிறார்.

தெலுங்கானாவில் 16 நாட்கள்
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 16 நாட்கள் நடக்கிறது. இதில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி மராட்டியத்தில் நுழைகிறார். முன்னதாக நவம்பர் 4-ந்தேதி யாத்திரைக்கு ஓய்வு விடப்படுகிறது. தெலுங்கானாவில் இந்த பாதயாத்திரையின் போது பல்சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ராகுல் காந்தி சென்று வழிபாடு ெசய்கிறார். அத்துடன் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உளளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.