;
Athirady Tamil News

யாழ்.தெல்லிப்பழையில் 49 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

0

நேற்று முன்தினம் சனிக்கிழமை(05.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 49.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப் பகுதியில் யாழ்.வடமராட்சி அம்பனில் 13.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 9.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதுடன் ஏனைய பகுதிகளில் அதற்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(06.11.2022) இரவும் மழைவீழ்ச்சி பதிவாகி இருந்ததுடன் இன்று பிற்பகல்-5.45 மணி முதல் தற்போது வரை மிதமான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.