;
Athirady Tamil News

மட்டக்களப்பில் நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய ஆசிரியர் ஆலோசகர்

0

மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

40 ஆயிரம் ரூபா அபதாரம்
இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீடடின் பெண் ஒருவருக்கு நாய் கடித்துள்ளதை அடுத்து அவர் காயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கடிவாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து நாயின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு சாராரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என தனக்கு நட்டஈடாக 40 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என கோரினார்.

இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.