;
Athirady Tamil News

சமூகவலைத்தள பதிவால் ரூ.8 லட்சம் மாத வருமானத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்

0

மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்தார்.

அமெரிக்கா தூதரகத்திற்கு உள்ளே பைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதால், அங்கு வருபவர்களின் பைகளை வாங்கி வைத்து, அதற்கு ரூ.1000 கட்டணம் வசூலித்து வந்தார்.

இதன் படி, ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 20-30 பேர் வருகையில், மாதம் ரூ.8 லட்சம் அளவிற்கு வருமானம் ஈட்டி வந்தார்.

Lenskart நிறுவனத்தின் உயரதிகாரியான ராகுல் ருபானி இந்த விடயத்தை linkedin தளத்தில் பகிர்ந்த பின்னர், இந்த விடயம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

இந்த விடயம் வைரலானதையடுத்து, அவரது வருமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த விடயம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது போன்று, தூதரகத்திற்கு வருபவர்களின் தனிப்பட்ட உடமைகளை எந்த அனுமதியுமின்றி பெற்று வைத்திருந்தது சட்டவிரோதமான ஒன்று. பாதுகாப்பு காரணங்களுக்காக தூதரகத்தின் வெளியே வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளனர்.

மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த அந்த நபர், ஒரு சமூகவலைத்தள பதிவின் மூலம் தனது வருமானத்தை இழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.