;
Athirady Tamil News

இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால்… ஜெய் ஷாவிடம் கறாராக கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!!

0

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.