யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இளைஞனிடம் இருந்து 11 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .