;
Athirady Tamil News

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை மண்சரிவு அபாய எச்சரிக்கையை இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

நிலை 01 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் கங்கை கோறளை, கோகாலை மாவட்டத்தில் தெரிணியகல, யட்டியாந்தோட்டை,

தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத்த, கலவான, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குமே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.