;
Athirady Tamil News

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை அல்ல, முதலமைச்சரின் கோட்டை- அமைச்சர் பேட்டி!!

0

ஈரோட்டில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த 1½ ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறான கருத்து.

முதலமைச்சரின் கோட்டை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பா.ஜ.க. ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதை போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர். மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதை பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010-ல் இருந்த மின்கட்டனத்தை விட கூடுதலாக அ.தி.மு.க. ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

விசைத்தறிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.