;
Athirady Tamil News

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 3 நாள் பயணமாக இந்தியா வருகை!!

0

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 19ம் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ள அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக நிக்கி ஏசியா ஊடகம் கூறும்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற 19ம் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு ஜி-7 மற்றும் ஜி-20 தலைவர்களாக ஜப்பானும், இந்தியாவும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை இந்திய பிரதமர் மோடியுடன் உறுதிப்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக உள்ளார்.

ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில், மற்ற நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த புமியோ கிஷிடா விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார். மோடி- புமியோ கிஷிடா சந்திப்பின்போது ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.