;
Athirady Tamil News

யாழ் மாணவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு

0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவன் ஒருவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், இத்தகவலை கூறியுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில், பொலிஸார் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைதானவர்களிடம் இருந்து , ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு வரும் நிலையில் யாழில் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.