வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது.
குறிப்பாக ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகப் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேசத்தின் தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேசத்தின் அரச நிர்வாக கட்டமைப்பின் பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பொறுப்பு நிலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

