ரஷ்ய ஜெனரல் படுகொலை குறித்து புடினுக்கு தெரிவிப்பு! மூன்றாவது சம்பவம்..யார் அவர்?
ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜெனரல் கொல்லப்பட்டார்.
படுகொலை
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஜெனரல் ஒருவரின் காருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து அவர் பலியானார்.
திங்கட்கிழமை அதிகாலை இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியதாக ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவின் பொதுப் பணியாளர் பிரிவின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ், தனது காயங்களால் உயிரிழந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சம்பவம்
காவல்துறையினர் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பரில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது இது மூன்றாவது சம்பவம் ஆகும்.
ஜெனரலின் மரணம் குறித்து ஜனாதிபதி புடினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்கரிடம் தெரிவித்தார்.
யார் அந்த ஜெனரல்
கொல்லப்பட்ட சர்வாரோவ், 2016 முதல் பொதுப் பணியாளர்களின் செயல்பாட்டுப் பயிற்சித் துறைக்குத் தலைமை தாங்கி வந்தார்.
அவர் Chechen போர்களில் பங்கேற்றதாகவும், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.