;
Athirady Tamil News

நூறு வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் மூதாட்டி!

0

கனடாவில் நூறு வயது மூதாட்டியொருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில அநேகமானவர்கள் தங்களது 20 வயதுகளில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால், மிரியம் டீஸ் (Miriam Tees) என்ற மூதாட்டி 100 வயதில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார்.

1923 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி பிறந்த மிரியம் தனக்கு மிகவும் பிடித்தமான பல்வேறு கற்கை நெறிகளை மிரியம் கற்றுத் தேர்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் 17 வயதில் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட மிரியம் பல்வேறு திறமைகளைக் கொண்டவராக காணப்படுகின்றார்.

100 வயதான மிரியத்துடன் மேலும் ஆயிரம் சிரேஸ்ட பிரஜைகள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.