இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள வீடுகளில் தேடி பயாகல பொலிஸில் முறைபாடு அளித்துள்ளனர்.
விசாரணை
அதன்படி, விசாரணைகளைத் தொடங்கிய பின்னர் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள், பயாகல பொலிஸார் மற்றும் பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட குழு சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.