;
Athirady Tamil News

“கட்டிப்பிடிக்கத் தடை இல்லை” பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு !!

0

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.லமாவன்ச தெரிவித்துள்ளார்

பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்ள்கின்றனர் , அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் பேராசிரியர் லமாவன்ச கூறியுள்ளார் .

“எனது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும். கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கிறேன்,” என்றார்.

வளாகத்தில் கட்டிப்பிடிப்பது தடைசெய்யப்படவில்லை, ஆனால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பல பார்வையாளர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க தங்கள் வரம்புகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.