;
Athirady Tamil News

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வரும் 31-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். கலிபோர்னியா, வாஷிங்டன் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ராகுல் காந்தி ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.